A PAGE FROM OUR SCHOOL DAIRY.
1819-மெதடிஸ் ஆங்கில உயர் பாடசாலை என உருவாக்கப்பட்டது ஆண் பெண் இரு பாலரும் கல்வி கற்றனர்.( திருச்சபையுடன் இணைந்திருந்தது)
1821 to 1823- ஆங்கில பெண்மணியான ROBERT HAVER என்பவரால் நிர்வகிக்கப்பட்டது.
1856-JOHN WALTON இன் ஏற்பாட்டில் திருச்சபையில் இருந்து தனியாக விலகி இயங்கியது.
1859- தி / மெதடிஸ்த பெண்கள் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டு விடுதி வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.
1902- மாவட்டத்தில் அதிவளர்ச்சி கொண்ட பாடசாலையாக பதியப்பட்டது.
1930- ஆங்கில பெண்மணிகளான Miss.Everett தலைமை வகித்தல் ,பின்னர் Miss.Gardinner தலைமை வகித்தல்.
1938- Miss.Everett தலைமை வகித்தல்.
01.07.45-09.06.46- வருடாந்த மேற்பார்வை அறிக்கையில் கல்லூரியின் வளர்ச்சி நிலை பற்றி பதியப்பட்டது.
1950-Mrs.M.Arumainayakam அதிபராக பதவியேற்றல்.
1967-. கல்வி அமைச்சர் கல்லூரியை தரிசித்தார்.
1975-Mrs.E.R.Gunaretnam அதிபராக பதவியேற்றல்.
1985-Mr.N.Chandrakanthan அதிபராக பதவியேற்றல்.
1986-Mrs.M.Somasuntharam அதிபராக பதவியேற்றல்.
1991-Miss.K.Ponnampalam அதிபராக பதவியேற்றல்.
13.05.1996- வடக்கு கிழக்கு கல்வி செயலாளர் சுந்தரம் டிவகலாலா அவர்கள் கல்லூரிக்கு மேலும் காணி சுவீகரிப்பு பற்றி கலந்துரையாடி ஒழுங்கு செய்தல்.
24.03.1997-திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்கதுரை அவர்களினால் புதிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது09.02.1998- ஒன்று கூடல் மண்டபத்துடன் கூடிய மூன்று மாடிகள் கொண்ட புதிய கட்டடத்திற்கு வடகிழக்கு மாகாண கல்வி செயலாளர் சுந்தரம் டிவகலாலா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
1998- செல்வி. பிரதீபா துரைராஜா க.பொ.த சா/த 8 பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
01.03.2001- ரூபவாஹினி ஒலிபரப்பு சேவையில் எமது மாணவிகள் பங்கு பற்றிய "மலரும் மல்லிகை" நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
24.08.2001-Mrs.U.Jothinathan அதிபராக பதவியேற்றல்.
12.07.2002- கல்லூரியில் HNB வங்கியின் கிளை திறக்கப்பட்டது.
2003- அருமைநாயகம் புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.
13.02.2004- புதிய விடுதிக்கான புதிய மாடி கடிட திறப்புவிழா இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் திரு. இரா.சம்பந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
16.02.2004- "அருமை நாயகம்" புலமை பரிசில் திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு புலமை பரிசு வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
09.03.2004- மாணவர் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
26.06.2004- எமது கல்லூரியின் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும், குடும்ப பாடசாலையான புனித சூசையப்பர் கல்லூரி ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் இணைந்து செயல்நிலை ஆய்வு என்னும் 5 நாட்கள் கருத்தரங்கில் ஈடுபட்டனர்.
16.07.2004-Light house english project ஆரம்பிக்கப்பட்டது.
26.07.2004- சக்தி தொலைக்காட்சியின்" களம் "விவாத நிகழ்ச்சியில் எமது மாணவர்கள் பங்கு பற்றினர்.
09.12.2004- தரம் ஐந்தில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 11மாணவர்களுக்கான பாராட்டு விழா இடம்பெற்றது. பிரதம விருந்தினராக ஆரம்பக்கல்வி உதவிகல்வி பணிப்பாளர் திருமதி. இராஜரட்ணம்பிள்ளை கலந்து கொண்டார்.
26.12.2004- சுனாமி அனர்த்தம் காரணமாக மனையாவெளி வெள்ள அகதிகள் தஞ்சம் அடைந்தனர்.
25.07.2005- கல்லூரியில் LEO CLUB ஆரம்பிக்கப்பட்டது.
23.06.2006- பாடசாலை புதிய இரண்டு மாடி கட்டிடத்திற்காக அடிக்கல் அருட்தந்தை S.A சுவர்ணராஜா அவர்களால் நடப்பட்டது.
08.11.2006-MTV தொலைக்காட்சி அலை வரிசையின் "அறிவு' நிகழ்ச்சியில் தரம் ஏழு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
26.01.2007- கண்காட்சி இடம் பெற்றது. பிரதம விருந்தினராக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி.S. ஜலதீபன் கலந்து கொண்டார்.
10.09.2007- பரிசளிப்பு விழாவும்,புதிய மாடி கட்டட திறப்பு விழாவும் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக திரு.R. தியாகலிங்கம் கலந்து கொண்டார்.
03.12.2007- தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு இடம் பெற்றது. பிரதம விருந்தினராக பிரதிகல்வி பணிப்பாளர் திரு.N. விஜேந்திரன் கலந்து கொண்டார்.
03.03.2008- மாணவத் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டு நிகழ்வு இடம் பெற்றது.
26.05.2008- மொழிகளுக்கு ஊடாக சமாதான நிகழ்வு இடம் பெற்றது.
11.02.2009- கௌரவ முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் அமைச்சர் M.L.M.ஹிஸ்புல்லா ஆகியோர் வருகை தந்தனர்.
02.2009-19.03.2009- முல்லை தீவிலிருந்து இடம் பெயர்ந்த அகதிகள் ஒன்றரை மாத காலமாக தங்கி இருந்தனர்.
22.05.2009- வலயக்கல்வி பணிப்பாளரது அறிவுறுத்தலுக்கு அமைய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
22.06.2009- ஆரம்பப் பிரிவு மாணவர்களது பாடசாலை மட்ட கண்காட்சி இடம் பெற்றது.]
23.06.2009- தரம் 6-13 வரை உள்ள மாணவர்களது பாடசாலை மட்ட கண்காட்சி இடம்பெற்றது.
11.07.2009-வருடாந்த பரிசளிப்பு விழாவும் மலர்வெளியீடும் இடம்பெற்றது பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதான செயலாளர் திரு V.P. பாலசிங்கம் கலந்து கொண்டார்.
03.09.2009- மாணவத் தலைவர், வகுப்பு தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி உப்புவெளி கிரேஸ் இல்லத்தில் இடம்பெற்றது.
22.09.2009- ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட SUPER SINGAR 2009 போட்டி இடம் பெற்றது.
06.10.2009- ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது பிரதம விருந்தினராக மேலதிக மாகாண கேள்வி படிப்பாளர் திரு M.மன்சூர் கலந்து கொண்டார்.
26.12.2009-(2004.12.26) அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது இறந்த நமது பாடசாலை மாணவி வைஷ்ணவி ஞானசேகரம் அவர்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது S.L.R.C பொறுப்பாளர் ,Dr. ஞானகுணாளன் தலைமை தாங்கினார்.
18.01.2010- முதலாம் தர மாணவர் வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது. முதன்மை விருந்தினராக திருச்சபை அருட்சகோதரி ஜோதினி சீனித்தம்பி கலந்து கொண்டார்.
19.02.2010- வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம் பெற்றது முதன்மை விருந்தினராக மாகாண கல்வித்தினை பல பிரதி கேள்வி பணிப்பாளர் திரு கி.முருகப்பிள்ளை கலந்து கொண்டார்.
23.02.2010- நாணய கண்காட்சி இடம்பெற்றது.
11.06.2010- மாணவத் தலைவிகளுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
29.06.2010- கல்லூரி தினம் கொண்டாடப்பட்டது பிரதமிருந்தினராக திருமதி உன் ஜோதிநாதன் கலந்து கொண்டார். மெதடிஸ்த திருச்சபை போதகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
04.08.2010- கல்லூரியில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை உடன் இணைந்து குடிநீர் தினம் கொண்டாடப்பட்டது.
06.10.2010-உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
15.11.2010- தொழில்நுட்ப பாட ஆசிரியர் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இடம்பெற்றது. முதன்மை விருந்தினராக அமைச்சர் கௌரவ டாக்டர் துரையப்பா நவரெட்ணராஜா கலந்து கொண்டார்.
07.12.2010-நத்தார் ஒளிவிழா இடம் பெற்றது. முதன்மை விருந்தினராக வண.பிதா. ஜோர்ஜ் திசாநாயக்கா கலந்து கொண்டார்.
11.01.2011-மாகாண கல்வி பணிப்பாளரின் வானொலி அறிவுறுத்தல்களுக்கு அமைய கடும்மழை காரணமாக பாடசாலை மூடப்பட்டது.
1.01.2011-மாகாண கல்வி பணிப்பாளரின் வானொலி அறிவுறுத்தல்களுக்கு அமைய கடும்மழை காரணமாக பாடசாலை மூடப்பட்டது.
18.01.2011-முதலாம் தர மாணவர் வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது.
09.02.2011-தொடர்ச்சியான மழை காரணமாக 4 நாட்கள் பாடசாலை மூடப்பட்டது.
21.02.2011-வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இடம் பெற்றது. முதன்மை விருந்தினராக உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் திரு s.யாகூப்யான கலந்து கொண்டார்.
08.04.2011- மாணவர் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு இடம் பெற்றது. முதன்மை விருந்தினராக கனடாவில் வசிக்கும் பழைய மாணவி திருமதி வளர்மதி தினேஷன் கலந்து கொண்டார்.
11.05.2011-சிம்மியா மிசன் திருமலை மட்டக்களப்பு வதிவிட ஆச்சாரியார் "பிரம்மசாரணி மகிமா சைதன்யா" அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்தார்.
26.05.2011-School Level English Day இடம்பெற்றது.
29.05.2011- கல்லூரி தினம் கொண்டாடப்பட்டது.முதன்மை விருந்தினராக மெதடிஸ்த திருச்சபை அருட்சகோதரி சீனித்தம்பி கலந்து கொண்டார்.
08.07.2011- வலய கல்வி திணைக்களத்தின் விருது அழைப்பு நிகழ்வு இடம் பெற்றது. பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி செயலாளர் திரு N.A.A.புஷ்ப குமார கலந்து கொண்டார்.
21.07.2011- பழைய மாணவர் தினம் கொண்டாடப்பட்டது முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு V.P பாலசிங்கம் கலந்து கொண்டார்.
12.10.2011- சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது பிரதம விருந்தினராக பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் திருமதி R.தோமஸ் கலந்து கொண்டார்.
05.11.2011- வாணி விழா நடைபெற்றது.
08.12.2011- ஒளிவிழா கொண்டாடப்பட்டது. முதன்மை விருந்தினராக கல்லூரியின் முன்னை நாள் அதிபர் E.R. குணரட்ணம் கலந்து கொண்டார்.
18.01.2012- தரம் ஒன்று மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சபை செயலாளர் திருமதி J.J. முரளிதரன் தலைமை வகித்தார்.
08.02.2012- மீலாத் விழா கொண்டாடப்பட்டது.
15.02.2012- வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்றது பிரதம விருந்தினராக பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உபசெயலாளர் திருG.கயிலாயநாதன் கலந்து சிறப்பித்தார்.
22.02.2012- மாணவ சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது பிரதம விருந்தினராக திருகோணமலை வலய கல்வி பணிப்பாளர் திரு கி.முருகப்பிள்ளை கலந்து கொண்டார்.
15.03.2012- மாணவத் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டு நிகழ்வு இடம் பெற்றது. பிரதம விருந்தினராக "Greenwich International School" அதிபர் டயானா அன்டனி கலந்து கொண்டார்.