தேசிய உற்பத்தித்திறன் போட்டிகளில் விசேட விருது பெற்று (Special commendation) மெதடிஸ்த பெண்கள் கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது.
அகில இலங்கை ரீதியாக, அரச நிறுவனங்களில் வருடாந்தம் உற்பத்தித்திறன்விருது வழங்குவதற்காகப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. பல்வேறு மட்டங்களிலே நடாத்தப்பட்ட மிகவும் நுணுக்கமான பரிசீலனைகளின் போது, விசேட விருது பெற்றுக் கொள்ளும் வகையில் இக்கல்லூரியின் செயற்றிறன் அமைந்திருந்தமை சிறப்பானதாகும்.
இத் தேசிய உற்பத்தித்திறன் விருதானது, கல்லூரியின் அதிபர் திருமதி. சுபா ஜோண் தேவதாஸ், அனைத்து ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவிகள் அனைவரினதும் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்த ஒரு அடையாளமாகும்.
Covid -19 நோய்த்தொற்று காரணமாக பாடசாலைகள் சீரற்று நடைபெற்ற 2020/21 காலப்பகுதியில்,
முதற்தடவையாக தேசிய உற்பத்தித்திறன் பரிசீலனைக்கு தோற்றிய போதிலும், Special commendation என்னும் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டமை சிறப்பான வெற்றியாகும்.