T/Methodist Girls College
Deputy Principal Messages
Mrs.G.Pushpakaran
Finance
பெண்கள் கல்லூரியில் பிரதி அதிபராக இருந்து இங்கு மாணவர்களால் உருவாக்கப்பட்ட வலைத்தள ஆக்க முயற்சிக்கு முதல் கண் தலை சாய்த்து ஆசி கூறுகின்றேன் இலங்கையின் கல்வி அமைச்சின் சிறந்த வழிகாட்டலுக்கு கட்டுப்பட்டு கல்வி சமூகம் தமது ஆக்கப் படங்களையும் பெருமைப்பாடுகளையும் உலகறிய செய்யும் இம்முயற்சி வரவேற்கத்தக்கதாகும் ஒவ்வொரு பாடசாலையில் பின்னால் நீண்டதொரு நிழல் உண்டு அது பாடசாலையின் வரலாறு விழுமியங்கள் சாதனைகள் படைப்புகள் சமூகம் என்பன வைரத்திற்கு ஒப்பானவை ஆகும் அத்தகைய பெறுமதி மிக்க தடயங்களை இணையத்தின் வளர்ச்சியால் அவரும் அறிய செய்யும் எம் ஆக்கத்திறன் குழுவிற்கு நன்றிகள் பல
Mrs.S.Mathiyalakan
Curriculum
திருகோணமலை நகரில் மிகவும் பழமையான கல்லூரி ஆக மெதடிஸ்த கல்லூரி திகழ்கிறது இக்கல்லூரி 205 வருட கல்வி சேவையை ஆட்சி வருவது என்பது திருவோணமலை மாவட்டத்திற்கு கல்வி வளர்ச்சிக்கு முதன்மையானது என்பதை இட்டு நாம் பெருமை கொள்ள வேண்டிய விடயமாகும். மெதடிஸ்த திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியானது ஆரம்ப காலத்தில் வேம்படிபாடசாலை என்று அழைக்கப்பட்டது.இக்கல்லூரி அன்று தொடக்கம் இன்று வரை பல பெண் ஆளுமைகளை சமூகத்திற்கு வழங்கி வருவது சிறப்புக்குரியதாகும். இன்று 1 AB பாடசாலை இயங்கும் கல்லூரியானது நோக்க கூற்று பனி கூற்று என்பவற்றுக்கு அமைவாக தனது கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.மாணவர்களுக்கு கல்வியை மட்டும் வழங்கும் நிறுவனமாக மட்டுமின்றி இணைப்பாடவிதானம் 21 ஆம் நூற்றாண்டுக்கான திறன்களை வழங்கும் கல்லூரி ஆக செயல்படுவதுடன் சமூக நோக்குடன் பெற்றோர்கள் பழைய மாணவிகள் நலன் விரும்பிகளையும் உள்ளடக்கி அதிபர் ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்களது ஒருங்கிணைவுடன் வினைத்திறனுடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. எனது நமது கல்லூரி தொடர்ந்து மேற்கொள்ளும் திட்டங்கள் செயற்பாடுகளோடு நாம் கைகோர்த்து செயல்படுவோம்.