திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் உயர்தர மாணவிகளுக்கான (2022) பிரியாவிடை வைபவம் 16.01.2023 திங்கட்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக, இக்கல்லூரியில் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள, திருமதி. புஸ்பராணி விமலகுமரன் ( உதவி அதிபர்)
திருமதி. இமாஷலா பிரதீபன் ( ICT ஆசிரியர்) ஆகியோரும்
சிறப்பு விருந்தினர்களாக பழைய மாணவிகளான செல்வி. றாஷிதா முகமட் றியாஸ் (முகாமைத்துவப் பட்டதாரி- றுகுணுப் பல்கலைக்கழகம் )
செல்வி மங்களேஸ்வரி கதிரவேல் (டிப்ளோமாதாரி,
பேராதனை தேசிய கல்வியற் கல்லூரி)
ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிகளுக்காக இந்நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கவிதைகள், அநுபவப்பகிர்வுகள், பாடல்கள், நாடகம், வில்லுப்பாட்டு என்பவற்றுடன் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

